நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் நான்கு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் தீவிரமாகிக் கொண்டே இருக்கிறது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் தினமும் 600 முதல் 800க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று (மே 25) மட்டும் 805 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் கரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மண்டல வாரியாக கரோனா பாதிக்கப்பட்டோரின் விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
மேலும், 5,331 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதுவரை சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 84 விழுக்காட்டினர் பிற நோய்களின் தாக்கத்தால் இறப்பு