ETV Bharat / state

சென்னையில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 513ஆக உயர்வு!

சென்னை: கரோனா பெருந்தொற்றால், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், 513ஆக உயர்ந்துள்ளதென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 513ஆக உயர்வு!
சென்னையில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 513ஆக உயர்வு!
author img

By

Published : May 10, 2020, 6:56 PM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா பெருந்தொற்று பரவல் தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுவரை, சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பாக ஈடுபட்டு வருகிறது. கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடு அமைந்திருக்கும் தெருக்களை, 'கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்' என மாநகராட்சி அறிவித்து, அதனைத் தடுப்புகள் அமைத்து மூடியுள்ளது. அதன்படி, மாநகரில் இதுவரை 513 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரம்:

  • ராயபுரம் - 101 பகுதிகள், திரு.வி.க. நகர் - 94 பகுதிகள்
  • வளசரவாக்கம் - 51 பகுதிகள், தண்டையார்பேட்டை - 46 பகுதிகள்
  • தேனாம்பேட்டை - 62 பகுதிகள், அம்பத்தூர் - 33 பகுதிகள்
  • அடையாறு மற்றும் அண்ணா நகர் - 13 பகுதிகள், பெருங்குடி - 12 பகுதிகள்
  • கோடம்பாக்கம் - 22 பகுதிகள், திருவொற்றியூர் - 27 பகுதிகள்
  • மாதவரம் - 18 பகுதிகள், மணலி - 9 பகுதிகள்,
  • சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் - 6 பகுதிகள்.

இந்தப் பகுதிகள் அனைத்தும், தொடர்ந்து 28 நாட்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகக் கண்காணிக்கப்படும். அதன் பின்னர், கரோனா பெருந்தொற்று இல்லை எனில், அப்பகுதிகளுக்குத் தளர்வு அறிவிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மலேசியாவில் தவித்த 177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.