கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வடசென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதிகளில் அதிகரித்துள்ளது. ஆயினும், இப்பகுதியில் கரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் பணியில், மாநகராட்சி நிர்வாகம் தொய்வின்றி செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் அதிகப்படியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் விவரம்:
திரு.வி.க.நகர்- 7,636 பேர் ( 88%)
அடையாறு - 6,689 பேர் (86%)
தேனாம்பேட்டை- 10,203 (90% )
அண்ணா நகர்- 10,763 (88%)
தண்டையார்பேட்டை- 9,134 பேர் (91%)
ராயபுரம்- 10,729 பேர் (91%)
மணலி- 1,686 பேர் (94%)
கோடம்பாக்கம்- 10,909 பேர் (87%)
மாதவரம்- 3,128 பேர் (86%)
திருவொற்றியூர்- 3,416 பேர் (87%)
அம்பத்தூர் -5,251 பேர் (76%)
வளசரவாக்கம்- 5,227 பேர் (85%)
ஆலந்தூர்- 3,027 பேர் (84%)
பெருங்குடி- 2,664 பேர் (82%)
சோழிங்கநல்லூர் - 2,219 பேர் (82%)