ETV Bharat / state

சென்னையில் 70 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு - சென்னை மாநகராட்சி

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 17ஆக உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

chennai
chennai
author img

By

Published : Jul 7, 2020, 1:21 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க. நகர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. இதன் பரவலைத் தடுக்க மாநகராட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது.

15 மண்டலங்களிலும் அதிகபட்சமாக பாதிப்பு ராயபுரத்தில்தான் ஏற்பட்டுள்ளது. அங்கு ஜூலை 1ஆம் தேதி எட்டாயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு வாரங்களில் கிட்டத்தட்ட மேலும் ஆயிரம் பேர், இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது அங்குள்ள மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

அப்பகுதியில் பரவலைத் தடுக்க, அடர்த்தியான பகுதிகளில் வாழும் மக்களை மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்ட மையங்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவுளிக்கப்பட்டுவருகிறது. அங்குள்ள அனைவருக்கும் தினமும் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

  • ராயபுரம் - 8,981
  • தண்டையார்பேட்டை - 7,762
  • தேனாம்பேட்டை - 7,775
  • கோடம்பாக்கம் - 7,540
  • அண்ணா நகர் - 7,735
  • திரு.வி.க நகர் - 5,693
  • அடையாறு - 4,435
  • வளசரவாக்கம் - 3,390
  • அம்பத்தூர் - 3,176
  • திருவொற்றியூர் - 2,705
  • மாதவரம் - 2,257
  • ஆலந்தூர் - 1,901
  • பெருங்குடி - 1,826
  • சோளிங்கநல்லூர் - 1,521
  • மணலி - 1,296
    மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 70 ஆயிரத்து 17 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.