கரோனா வைரஸால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்த பரவலை தடுக்கும் முதலில் நோய்தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் முழு தெருவையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்திருந்தது. இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் தெருவை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது.
தற்போது இ-பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பதால் சென்னைக்கு வருபவரின் எண்ணிக்கை அதிகரிக்கத தொடங்கியதுள்ளது. இதனால் நோய் தொற்று சென்னையில் கணிசமாக உயர்ந்து வருகிறது.
அதன்காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் உயர்ந்துவருகிறது. அதன்படி, சென்னையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 23 இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், தற்போது 35 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மண்டல வரையான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
அண்ணா நகர் - 12
கோடம்பாக்கம் - 1
வளசரவாக்கம் - 7
ஆலந்தூர் - 1
அடையார் - 10
பெருங்குடி - 1
சோழிங்கநல்லூர் - 3