ETV Bharat / state

சென்னையில் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 4 மட்டுமே!

author img

By

Published : Sep 16, 2020, 5:04 PM IST

சென்னை : கரோனா தொற்றால் குணமடைந்தோரின் விழுக்காடு அதிகரித்துவரும் நிலையில் சென்னையில் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நான்கு மட்டுமே உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது

Chennai Containment Zone
Chennai Containment Zone

கரோனா தொற்றால் குணமடைந்தோரின் விழுக்காடு அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் அமைப்பது என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

மேலும் நோய்ப் பரவலைத் தடுக்க நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் தங்கிவந்த முழுத் தெருவையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்திருந்தது. இது மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியதால் ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் மட்டும் தெருவைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துவருகிறது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குணமடைந்தோரின் விழுக்காடு தினமும் அதிகரித்துவருவதால் கட்டுப்பாட்டு பகுதிகளும் குறைந்துவருகிறது. தற்போது சென்னையில் 4 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அந்த நான்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் மணலியில் உள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாநகராட்சி அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருகிறது. 14 நாள்களில் அந்தப் பகுதிகளில் நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றால் அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து நீக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.