ETV Bharat / state

செஸ் நகரமாக மாறும் சென்னை மாநகரம் - கோலாகலம் அடையும் செஸ் ஒலிம்பியாட் போட்டி! - Chennai city

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் செஸ் விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.

செஸ் செக்போஸ்டாக மாறிய சென்னை மாநகரம் - செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலம்!

author img

By

Published : Jul 16, 2022, 5:39 PM IST

Updated : Jul 17, 2022, 10:41 PM IST

சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அருகேயுள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதில் 188 நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 1927ஆம் ஆண்டு முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

செஸ் செக்போஸ்டாக மாறிய சென்னை மாநகரம் - செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலம்!
செஸ் செக்போஸ்டாக மாறிய சென்னை மாநகரம் - செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலம்!

ஆனால், இந்தியாவில் முதன்முறையாக அதுவும் தமிழ்நாட்டில் இப்போட்டி நடைபெற உள்ளது. மக்கள் மத்தியில் இப்போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள், FIDE மற்றும் இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி, முதன்முறையாக தொடங்கப்பட்டது.

இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 பெரு நகரங்களுக்குச்சென்று ஜூலை மாதம் 28ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு இப்போட்டியை பிரபலப்படுத்தும் வகையில், சென்னை முழுவதும் விளம்பரப்பலகைகள் மற்றும் பேனர்களை வைத்துள்ளது.முக்கிய இடங்களான அண்ணா சாலை, மெரினா கடற்கரை எனப் பல்வேறு இடங்களில் விளம்பரப்பலகைகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 'தம்பி' என்ற பெயருடன் உருவாக்கப்பட்ட சதுரங்க குதிரை வடிவ லோகோ, தலைமைச்செயலகம் மற்றும் மெரினாவில் உள்ள 'நம்ம சென்னை' செல்ஃபி எடுக்கும் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையின் முக்கிய சாலைகளின் நடுவில் (road center median) 'நம்ம சென்னை, நம்ம செஸ்' என்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சென்னை நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் பலகை போன்ற வண்ணம் பூசப்பட்டுள்ளது.

செஸ் நகரமாக மாறும் சென்னை மாநகரம் - கோலாகலம் அடையும் செஸ் ஒலிம்பியாட் போட்டி!

தற்போது இது மக்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு செய்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், "சென்னையில் இப்போது எங்கும் செஸ்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு டிக்கெட் விலை நிர்ணயம்

Last Updated : Jul 17, 2022, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.