ETV Bharat / state

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை!

author img

By

Published : Jul 12, 2022, 2:19 PM IST

காவல் துறை சம்மந்தமான அலுவலகத்தில் மின்சாதனப் பொருட்கள் பயன்பாடு தேவைப்படாதபோது, அதை முழுமையாக அணைத்து வைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவலர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளார்.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவலர்கள் மற்றும் காவல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை இன்று (ஜூலை 12) அனுப்பியுள்ளார். அதில் "நுகர்வோர் அமைப்பு ஆய்வில் சுமார் 70 சதவீதம் பேர் தங்களுடைய வீட்டு உபயோக பொருட்களை முழுமையாக அணைத்து வைக்காமல், மின்சார இணைப்பு தொடர்ச்சியாக வரும் வகையில் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், பயன்படுத்தாத மின்சாரத்திற்கும் சேர்த்து கட்டணம் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.

மின்சாதன பொருட்களின் பிரதான சுவிட்சை அணைக்காமல் இருந்தால், தொடர்ந்து மின்சாரம் நுகர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பாக ஏசி, டிவி, சார்ஜர் ஆகிய மின்சாதன பொருட்களின் பிரதான சுவிட்சை அணைக்காமல் விட்டால் ஆண்டுக்கு சுமார் 1000 ரூபாய் அளவிற்கு மின்சார கட்டணம் கூடுதலாக செலுத்த நேரிடுகிறது. சுமார் 174 யூனிட் அளவுக்கு மின்சார இழப்பை இது ஏற்படுத்துகிறது.

174 யூனிட் மின்சாரத்தில் ஓராண்டு முழுவதும் எல்இடி பல்பை எரியவிட முடியும். 1.5 டன் ஏசியை 116 மணி நேரம் இயக்க முடியும். எனவே, காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அலுவலர்கள், தங்களின் கீழ் பணிபுரியும் காவலர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி, தங்கள் அலுவலகத்தில் உள்ள மின்சாதன பொருட்கள் பயன்பாடு தேவைப்படாத நேரத்தில் சரிவர அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக தலைமையகத்திற்கு சீல் வைத்த விவகாரம்: இருதரப்பினரும் ஆஜராக நோட்டீஸ்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.