ETV Bharat / state

போலி சான்றிதழ் மூலம் விசா எடுக்க முயற்சி முதல்.. பாஜக - திமுக நிர்வாகிகள் மோதல் வரை சென்னை குற்றச் செய்திகள்! - dmk

Chennai Crime News: போலி சான்றிதழ் மூலம் அமெரிக்க விசா எடுக்க முயற்சிப்பதாக தூதரக அதிகாரிகள் கொடுத்த புகார் தொடங்கி, வாக்காளர் சரிபார்ப்பு முகாமில் பாஜக, திமுக நிர்வாகிகள் மோதம் உள்ளிட்ட சென்னையில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்த தொகுப்பு.

Chennai Crime News
சென்னை குற்ற செய்திகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 5:37 PM IST

போலி சான்றிதழ் மூலம் அமெரிக்க விசா எடுக்க முயற்சிப்பதாக தூதரக அதிகாரிகள் புகார்: கல்வி மற்றும் பணி ஆணை நியமனங்களை போலியாக தயார் செய்து சிலர் அமெரிக்க விசா பெற முயற்சிப்பதாக, அமெரிக்க நாட்டு தூதரக அதிகாரிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தனர். அதில், இந்த மோசடி சம்பவத்தில் தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த நபர்களே அதிகம் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில், போலிச் சான்றிதழ்களை கொடுத்து விசா பெற முயற்சித்த சில நபர்களை, சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ள நிலையில், போலி சான்றிதழ்களை தயாரிக்கும் கும்பலை பிடிப்பதற்கு ஆந்திரா, தெலங்கானா போலீசார் உதவியுடன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

போதை பொருட்களை கடைகளில் விற்பனை செய்வதை தடுக்க குழு : சென்னையில் முற்றிலுமாக போதை பொருள் விற்பனையை தடுப்பதற்காக, சென்னை காவல்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் போலீசார் மட்டுமல்லாமல், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால், பறிமுதல் செய்து கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர்.

அந்த வகையில், சென்னை காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து 20 குழுகளை அமைத்துள்ளனர். இந்தக் குழுவில் ஒரு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், இரண்டு காவல்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட உள்ளனர்.

இதில், கடைகளில் மூன்று கிலோக்கு மேல் குட்கா பொருட்களை வைத்து விற்பனை செய்தால், கடையை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையும் ஈடுபடுவர்.

மூன்று கிலோவிற்கு உள்ளே குட்கா விற்பனை செய்தால், முதல் முறை ஐயாயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை சோதனையின் போது பிடிபட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், மூன்றாவது முறை சோதனையின் போது பிடிபட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.

இந்தக் குழுவானது நாளை முதல் (நவ.28) சென்னை முழுவதும் திடீரென கடைகளில் புகுந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் சரிபார்ப்பு முகாமில் பாஜக, திமுக நிர்வாகிகள் இடையே மோதல்: திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில், பாஜக சார்பில் வாக்காளர் சரிபார்ப்பு முகாம் நடைபெற்றது. அப்போது சிலர் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பாஜக கட்சியைச் சேர்ந்த சிலரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாஜக மண்டல தலைவர் சுமன் காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பாஜக சார்பாக புகார் அளித்துள்ளார். அதில், பாஜக சார்பாக நடத்தப்பட்ட வாக்காளர் சரிபார்ப்பு முகாமில், திமுகவைச் சேர்ந்த சிலர் புகுந்து தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்கு நடைபெற்ற மோதல் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்.. மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.