சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில், பயோ நியூட்டன்(48) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்து எதிர்பாராத நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதில் நிலைதடுமாறி போன நியூட்டன், ஒரு வழியாக தட்டு தடுமாறி கிழே விழாமல் தப்பினார். அந்த நேரத்தில் சங்கிலி பறிப்பு நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.
இது குறித்து பயோ நியூட்டன், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருடிய வாகனத்தில் டீசல் இல்லாததால் மாட்டிக்கொண்ட திருடர்கள்!