ETV Bharat / state

அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த சுங்க அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை!

சென்னை : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சுங்கத் துறை அலுவலருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

court
author img

By

Published : Nov 14, 2019, 11:45 PM IST

சென்னை சுங்கத்துறையில் அலுவலராக பணியாற்றிய ஜெக்மோகன் மீனா என்பவர், 2007 – 2009 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 15 லட்சத்துக்கு மேல் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

ஜெக்மோகன் மீனா, அவரது மனைவி தர்மி மீனா, மகன் நிரஞ்சன் குமார் மீனா ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி விசாரித்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மூவரையும் குற்றவாளிகள் என அறிவித்து, சுங்கத்துறை அலுவலர் ஜெக்மோகன் மீனாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்ற இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.

மேலும், மூவருக்கும் சேர்த்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க : படையப்பா' ஸ்டைலில் பாம்புடன் டிக் டாக் - கடிவாங்கி துடித்த இளைஞர்

Intro:Body:வருமானத்திற்கு அதிகமாக, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக சென்னை சுங்கத் துறை அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை சுங்கத்துறையில் அதிகாரியாக பணியாற்றிய ஜெக்மோகன் மீனா, 2007 –2009 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 15 லட்சத்து 89 ஆயிரத்து 507 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

ஜெக்மோகன் மீனா, அவரது மனைவி தர்மி மீனா மற்றும் நிரஞ்சன் குமார் மீனா ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி விசாரித்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மூவரையும் குற்றவாளிகள் என அறிவித்து, சுங்கத்துறை அதிகாரி ஜெக்மோகன் மீனாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்ற இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். மேலும், மூவருக்கும் சேர்த்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.