சென்னை அண்ணாசாலையில் பிரபல தனியார் பிரியாணி ஹோட்டலில் மின் கோளாறு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சமையலறையில் இருந்து கட்டிடத்தின் பக்கவாட்டு மேற்கூரைக்கு செல்லக்கூடிய புகைபோக்கி திடீரென தீப்பற்றியது.
ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு தீயை முன்பே அணைக்க முயற்சி செய்துள்ளனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இதையும் படிக்க: வாட்ஸ்அப்பின் அடுத்த அதிரடி - வாயைப் பிளந்த பயனாளர்கள்!