ETV Bharat / state

ஃபோர்ப்ஸ் இதழின் பட்டியலில் இடம்பிடித்த சென்னை நிறுவனம்!

சென்னையைச் சேர்ந்த ’அக்வா கனெக்ட்’ ( aqua connect) நிறுவனம் ஃபோர்ப்ஸ் இதழின் ஆசியாவின் 100 கவனிக்கத்தக்க நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Aquaconnect
அக்வா கனெக்ட்
author img

By

Published : Aug 13, 2021, 1:50 PM IST

சென்னை: அக்வா கனெக்ட் (aqua connect) நிறுவனம், ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட ஆசியாவின் 100 கவனிக்கத்தக்க நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டு கடல்சார் உணவு ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டு அக்வா கனெக்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது. கடல்சார் உணவுப் பண்ணைகளில்,குறிப்பாக மீன், இறால் போன்றவற்றை தகவல் தொழில்நுட்ப உதவியுடன் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது

இந்நிறுவனம் சந்தை இணைப்பு, நிதி உதவி, வளர்ப்புக்கான காப்பீட்டு உதவி போன்றவற்றை பண்ணை விவசாயிகளுக்கு வழங்குகிறது.

இதுகுறித்து பேசிய இந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ராஜ்மனோகர் சோமசுந்தரம், "இந்தியாவில் தொழில்நுட்பத்துடன் வேளாண் துறையில் இயங்கி வரும் ஒரு சில நிறுவனங்களில் அக்வா கனெக்ட் நிறுவனமும் ஒன்று. தற்போது ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் ஆசியாவின் 100 கவனிக்கத்தக்க நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

Aquaconnect
ஃபோர்ப்ஸ் இதழின் பட்டியலில் இடம்பிடித்த அக்வா கனெக்ட்

இந்தியாவில் நீர்வாழ் உயிரின பண்ணையில் இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழ்கிறோம். எங்களின் சந்தை மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலராக உள்ளது.

அக்வா கனெக்ட், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலம் இத்துறையை மேலும் முன்னேற்றி எளிமையான வகையில் பண்ணை நடத்துவது, சந்தைப்படுத்துவது போன்றவற்றை செய்து வருகிறோம்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை எங்களை மதிப்பிட்டுள்ளது எங்களது செயல்பாட்டிற்கான சான்றாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனாவுக்கு இடையே கற்பித்தல் பணி... மலைக்கிராமக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.