சென்னை, அரும்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 52). இவர் போரூரி்ல் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார், நேற்று (செப்.03) இரவு நாகராஜ் அண்ணா வலைவு அருகே ஆட்டோவிற்க்காக காத்திருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், நாகராஜிடம் தான் அரும்பாக்கம் வழியாகதான் செல்லவதாகக் கூறி சவாரியாக அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக மாசுக் கட்டுபாட்டு வாரிய அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர், நாகராஜை கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 500 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, ஆட்டோவில் இருந்து அவரைக் கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
ஆட்டோவில் இருந்து தள்ளப்பட்டதில் காயமடைந்த நாகராஜ், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நாகராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அரும்பாக்கம் காவல் துறையினர், தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பப்ஜி விளையாடுவதை கண்டித்த பெற்றோர் - மனமுடைந்த மாணவன் தற்கொலை!