சென்னை: அரசு சார்பில் உரிய முறையில் ஆட்டோ ஆப் (செயலி) தொடங்க வேண்டும் என்றும்; இலவச GPRS மீட்டர் வழங்கிட வேண்டும் என்றும் ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக உள்துறை செயலாளருக்கு மனு கொடுக்கப்பட்டது.
அப்போது பேசிய அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், “ஆட்டோ ஓட்டுநர், மீட்டர் கட்டணம் மற்றும் கோரிக்கைகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும்.
ஆனால், இதுவரை புதிய மீட்டர் கட்டணம் குறித்து அரசு தரப்பில் அரசாணை வெளியாகவில்லை. இந்த காலதாமதம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ்நாடு அரசு காலதாமதப்படுத்தாமல் எங்கள் கோரிக்கை அடிப்படையில் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம் செய்து அரசு அரசாணை வெளியிட்டு ஆட்டோ தொழிலை, ஓட்டுநர்கள் வாழ்வை பாதுகாக்க வேண்டும். அரசு சார்பில் உரிய முறையில் ஆட்டோ ஆப் தொடங்க வேண்டும். இலவச GPRS மீட்டர் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்சி சிவா மகன் சூர்யா சிவா கைது - பாஜகவினர் தர்ணா!