சென்னை கத்திப்பாரா அருகே உள்ள இந்துஸ்தான் சர்வதேச பள்ளியில் நமது இந்தியத் திருநாட்டின் 74ஆம் ஆண்டு சுதந்திர தின நாளை முன்னிட்டு, அப்பள்ளியின் நாகர்கோவிலைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரான சிவராமன் (34) மகாத்மா காந்தியின் உருவத்தை 24 மணி நேரத்திற்குள் 74 விதங்களாக காபி தூள் திரவம் மூலம் வரைந்து கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டை குறிக்கும் விதமாகவும், ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் உலக சாதனையை முறியடிக்கும் வகையில், இதற்காக பழைய இருப்பில் இருந்த காபி தூளை சேகரித்து தண்ணீரில் அதனை கரைத்து கொதிக்கவைத்து, 50 அடி நீளம் 40.5 அடி அகலம் ஆக மொத்தம் 2020 சதுர அடி கொண்ட காடா துணியில், காந்தியடிகளின் 74 விதமான உருவங்களை 24 மணி நேரத்தில் வரைந்து முடிப்பதற்கான உலக சாதனை முயற்சியை சிவராமன் செய்து வருகிறார்.
இதற்கு முன்பு கடந்த ஜனவரி 6ஆம் தேதி கிரீஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் ஜாகிகியன் என்பவர் காபி தூளை தண்ணீரில் கொதிக்கவைத்து ஆயிரத்து 704 சதுர அடியில் அந்நாட்டு வரைபடத்தை வரைந்ததே இதற்கு முன்பு உலக சாதனையாக இருந்தது.
அதேபோல், இந்தியாவில் மகாத்மா காந்தி ஓவியத்தை ஆந்திராவைச் சேர்ந்த ஆதிபுடி தேவிஸ்ரீ என்பவர் 156.5 சதுரமீட்டர் அளவில் உள்ள படத்தை 33 மணி நேரத்தில் வரைந்தது இந்தியாவின் சாதனையாக இருக்கிறது.
எனவே உலக சாதனையையும், நமது இந்திய சாதனையும் முறியடிப்பதற்காக ஓவிய ஆசிரியர் சிவராமன் மிகத் தீவிரமாக ஓவியத்தை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: 74ஆவது சுதந்திர தின விழா ஒத்திகை