ETV Bharat / state

சென்னை அந்தமான் இடையே 4 நாட்களுக்கு பின்பு மீண்டும் விமான சேவை தொடக்கம் - சென்னை

சென்னை- அந்தமான் இடையே 4 நாட்களுக்கு பின்பு இன்று அதிகாலையிலிருந்து மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.

சென்னை அந்தமான் இடையே 4 நாட்களுக்கு பின்பு மீண்டும் விமான சேவைகள் தொடக்கம்

author img

By

Published : Nov 5, 2022, 4:24 PM IST

அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணி நடந்ததாலும், மோசமான வானிலை நிலவியதாலும், பயணிகள் பாதுகாப்பு கருதி, கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து நேற்று வரை, நான்கு நாட்கள் சென்னையில் இருந்து அந்தமானுக்கு எந்த விமானங்களும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

குறிப்பாக அந்தமானுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்பவா்களும், அதோடு அந்தமானில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிப்பதாலும், அந்தமானில் உள்ளவர்கள், இங்கு வர முடியாமலும், இங்கு உள்ளவர்கள் அந்தமானுக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில் அந்தமான் விமானநிலைய பராமரிப்பு பணி முடிவடைந்ததாலும், தற்போது வானிலை சீரடைந்து விட்டதாலும், இன்று காலையில் இருந்து சென்னை அந்தமானிடையே மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியது.

இன்று அதிகாலை 4.25 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், முதல் விமானமாக, அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது. அதைத் தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், ஃகோ ஏா் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் என்று இன்று ஒரே நாளில் ஐந்து விமானங்கள் அந்தமான் செல்கின்றன.

அதைப்போல் அந்தமானிலிருந்து ஐந்து விமானங்கள் சென்னை வருகின்றன. இன்று அந்தமான் சென்னை இடையே மொத்தம் பத்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் போது இது 14 விமானங்கள் வரை அதிகரிக்கப்படுகிறது.

நான்கு நாட்களுக்குப் பிறகு அந்தமானுக்கு விமானம் இயக்கப்பட்டதால், பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டு செல்கின்றனர்.

இதையும் படிங்க: ராயபுரத்தின் பெருமைமிகு தருணம்: சென்னையின் முதல் ரயில் பயணத்தின் நீங்கா நினைவுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.