மூன்று கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. குறிப்பாக, சென்னையில் தொற்றின் தீவிரம் கடுமையாக உள்ளது. இச்சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மே 31ஆம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கை அறிவித்தார்.
மற்ற மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சென்னையில் அதே கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். ஊரடங்கில் பெரும் பாதிப்புக்குள்ளான சாலையோரவாசிகள், ஏழை, எளிய மக்கள் ஆகியோரின் பசியைப் போக்கும் வகையில் சென்னையிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரையிலும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், “சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் காலமான மே 31ஆம் தேதி வரை, மூன்று வேளையும் இலவச உணவு தொடர்ந்து வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கு 4.0 அரசாணை வெளியீடு!