ETV Bharat / state

சுதாகரன் மீது போடப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற்ற நீதிமன்றம் - சுதாகரன் போடப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற்ற சிறப்பு நீதிமன்றம்

நற்பணி மன்ற நிர்வாகியை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக சுதாகரன் மீது போடப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai-allikulam-court-has-ordered-to-withdraw-warrant-issued-against-sudhakaran சுதாகரன் போடப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற்ற நீதிமன்றம்

author img

By

Published : Apr 13, 2022, 9:51 AM IST

சென்னை: வி.என். சுதாகரன் பெயரிலான நற்பணி மன்றத்தின் மாநில அமைப்பாளராக இருந்த கோபி ஸ்ரீதரன் என்பவரிடம் கடந்த 2001ஆம் ஆண்டு பணம் கேட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக வி.என்.சுதாகரன் உள்பட 4 பேர் மீது சென்னை பாண்டிபஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பின், இந்த வழக்கில் வி.என்.சுதாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் வி.என்.சுதாகரன் உள்பட 4 பேர் மீது சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் சுதாகரன், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டதால் இந்த வழக்கு விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 2021 அன்று சுதாகரனுக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுதாகரன்
சுதாகரன்

இந்நிலையில் நேற்று (ஏப்.12) இந்த வழக்கு நீதிபதி ஏ.எஸ்.ஹரிகரகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வி.என்.சுதாகரன் சரண் அடைந்தார். அவர், நீதிமன்றத்தில் ஆஜராக இயலாததற்கான காரணத்தைத் தெரிவித்து, அவர் மீதான ஜாமீனில் வரமுடியாத வாரண்டை திரும்பப் பெறக்கோரி அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, இந்த மனுவை ஏற்கக் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் பி.சுரேஷ் ஆட்சேபம் தெரிவித்தார். இந்தநிலையில், விசாரணைக்குப் பின்பு, சுதாகரன் மீதான வாரண்டை திரும்ப பெற்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 17ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: ஐஐடி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுக்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.