பிரிட்டன், நெதர்லாந்து நாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு சரக்கு விமானத்தில் வந்த கொரியர் பார்சல்களை சுங்கத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது நான்கு பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த பார்சல்களில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், அலங்கார ஆபரணங்கள் இருந்தன.
அதில் இரண்டு பார்சல்கள் சென்னை முகவரியிலும், ஒரு பார்சல் நாமக்கல் முகவரியிலும், ஒரு பார்சல் உதகை முகவரியிலும் இருந்தன. சுங்கத்துறை அலுவலர்களின் பரிசோதனையில் நான்கு பார்சல் முகவரிகள் போலியானவை என்பது தெரியவந்தது.
அந்த பாா்சல்களில் விலை உயா்ந்த போதை மாத்திரைகள் 215, போதை பவுடர்கள் இருப்பதை கண்டுப்பிடித்தனா். அவைகளின் மொத்த மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும். இதையடுத்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளா தங்கக் கடத்தல் : முதலமைச்சர் பினராயி விஜயனை பதவி விலகக் கோரும் பாஜக !