சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த பலத்த மழையால், சென்னை விமான ஓடுபாதையில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து நேற்று (நவ.4) காலையிலிருந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
நேற்று இரவு 11 மணியிலிருந்து சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம், புயல் ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்று அறிவுறுத்தியதன் பேரில் நேற்று இரவு 11 மணிக்கு தொடங்க வேண்டிய விமான சேவைகள் தள்ளி வைக்கப்பட்டது. இன்று (நவ.5) காலை 9 மணிக்கு மேல், மீண்டும் விமான சேவைகள் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை சென்னை விமான நிலைய அதிகாரிகள், விமான பாதுகாப்பு துறையான பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் அதிகாரிகள், ஓடுபாதை பராமரிப்பு பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், ஓடுபாதைகள் விமானங்கள் இயக்குவதற்கு தகுதியானதாக இருப்பதாக சான்றிதழ் வழங்கியதையடுத்து, மீண்டும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடங்கவுள்ளது.
-
#UPDATE | Airfield now open for all arrival and departure operations. #ChennaiRains #ChennaiAirport @MoCA_GoI | @AAI_Official | @pibchennai
— Chennai (MAA) Airport (@aaichnairport) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#UPDATE | Airfield now open for all arrival and departure operations. #ChennaiRains #ChennaiAirport @MoCA_GoI | @AAI_Official | @pibchennai
— Chennai (MAA) Airport (@aaichnairport) December 5, 2023#UPDATE | Airfield now open for all arrival and departure operations. #ChennaiRains #ChennaiAirport @MoCA_GoI | @AAI_Official | @pibchennai
— Chennai (MAA) Airport (@aaichnairport) December 5, 2023
இதற்கிடையே சென்னையை அச்சுறுத்திய மிக்ஜாம் புயல் தற்போது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்க உள்ளதால், சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னையில் இருந்து ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயவாடா, கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் விமானங்களும், அதேபோல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா, கர்னூல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் மிக்ஜாம் புயல் அச்சுறுத்தல் காரணமாக இன்று பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாலும், அதோடு பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மிகவும் குறைந்த அளவு விமானங்களே இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஹைதராபாத், திருச்சி, மும்பை, பெங்களூர், கோவை, டெல்லி, கௌஹாத்தி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட 89 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் துபாய், மஸ்கட், சார்ஜா, தாய்லாந்து, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அந்தமான், கோழிக்கோடு, மும்பை, கொல்கத்தா, ஹூப்ளி, கோவை, கொச்சி, மதுரை, திருச்சி, சேலம், அகமதாபாத் உள்ளிட்ட 88 வருகை விமானங்கள் என மொத்தம் 177 புறப்பாடு, வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று பிற்பகலில் இருந்து கூடுதல் விமானங்கள் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (நவ.6) முதல் விமான சேவைகள் வழக்கம்போல் முழு அளவில் இயங்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: குளம் போல் மாறிய சென்னை விமான நிலையம்! வீடியோ வைரல்!