ETV Bharat / state

சென்னை ஏர்போர்ட்டில் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு! - விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவு ஜனவரி மாதத்தில் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானங்கள் மற்றும் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

author img

By

Published : Feb 11, 2023, 7:23 AM IST

சென்னை: கரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு சென்னை விமான நிலையத்தில் தற்போது 2 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஜனவரி மாதத்தில் பயணிகள், விமானங்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளன. ஜனவரி மாதத்தில் சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் மொத்தம் 12, 380 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் ஜனவரி மாதம் முழுவதும் 17,61,426 பேர் பயணித்துள்ளனர்.

மேலும், 2022 டிசம்பர் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 17,22,496 ஆகவும் விமானங்களின் எண்ணிக்கை 12,103 ஆகவும் இருந்துள்ளது. இந்த ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 400 விமானங்களில் 56,822 பயணிகள் பயணித்துள்ளனர். 2022 டிசம்பர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 392 விமானங்களில் 55,565 பயணிகள் பயணித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பின்பு நாளுக்கு நாள் பயணிகள் மற்றும் விமானங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.அந்த விதத்தில் கடந்த டிசம்பர் மாதத்தை விட இந்த ஜனவரி மாதம் பயணிகள் மற்றும் விமானங்களில் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

  • As one of India's major and busiest airports, Chennai has registered a consistent rise in passenger traffic in recent months, and it is only getting better. In January 2023, Chennai Airport handled 17.61 lakh passengers through 12,380 aircraft movements. #ChennaiAirport pic.twitter.com/lbKHzdicKg

    — Chennai (MAA) Airport (@aaichnairport) February 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சமீப காலங்களில், இதுவரை இல்லாத அளவு இந்த ஜனவரி மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 62 ஆயிரத்து 486 பயணிகள் பயணித்தனர். சென்னை விமான நிலைய வரலாற்றில், ஒரே நாளில் அதிகபட்ச பயணிகள் பயணம் அதுவே சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கட்டுப்பாடாக இருந்திருக்க வேண்டும்' - விஜய் சேதுபதிக்கு உச்ச நீதிமன்றம் அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.