சென்னையில் இரண்டாம் நாளாக பனி மூட்டம் நிலவியது. அதன்காரணமாக மஸ்கட்டிலிருந்து காலை 5:30, 6.30 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய இரண்டு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன.
அதேபோல் காலை 5.35 மணிக்கு லண்டனிலிருந்தும், 5.55 மணிக்கு டெல்லியிலிருந்தும் வரவேண்டிய இரண்டு விமானங்களும் ஹைதராபாத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதுவரை நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், சென்னையிலிருந்து டெல்லி, மும்பை, கொச்சி, கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குளாகினர்.
இதையும் படிக்க: 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தால் நாடு வளம்பெறுமா?