சென்னை: தமிழ்நாடு காவல் துறையின் அனைத்து காவல் துறை கூடுதல் தலைவர், மண்டல காவல் துறைத் தலைவர், சரக காவல் துறைத் தலைவர், காவல் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை காவல் துறை கூடுதல் தலைவர் ரவி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “தமிழ்நாடு காவல் துறையில் சிறிய குற்றங்களில் ஈடுபட்டு, துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாகி இருக்கும் காவலர்கள் முதல், உதவி ஆணையர்கள் வரையிலான பட்டியலை dgpappeal4@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறைந்தபட்ச அளவிலான குற்றங்களில் சிக்கியவர்கள், மூன்றாண்டு ஊதிய உயர்வு நிறுத்தம், வாகனத் தணிக்கையில் லஞ்சம் பெற்ற புகாரில் சிக்கி துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளானோர் ஆகியோரது பட்டியலையும் அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சொகுசு கார் நுழைவு வரி வழக்குகள்: நீதிபதி சரமாரி கேள்வி!