ETV Bharat / state

போரூரில் கொடூரமாக இளைஞர் படுகொலை! - chennai youngster murder

சென்னை : முன்விரோதம் காரணமாக கை, கால்கள் கட்டப்பட்டு, தலையில் கல் வீசப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

crime murder
crime murder
author img

By

Published : Aug 27, 2020, 12:47 PM IST

சென்னை, போரூரை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் உள்ள புதர் மண்டிக் கிடந்த காலியிடம் ஒன்றில், இளைஞர் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாங்காடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு இளைஞர் ஒருவர், இரண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்டும், கால்கள் கட்டப்பட்டும் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்டு கிடந்த நபர், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசூரியா (வயது 20), என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஆண்டு அதே பகுதியில் இருந்த சுடுகாட்டில் வசந்தகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார் என்பதும், அந்தக் கொலைக்கு வழி வகுத்து கொடுத்தது ஜெயசூரியா என்பதால், வசந்தகுமாரின் தம்பி, அவரைப் பழிவாங்கும் விதமாக தற்போது ஜெயசூரியாவை கொலை செய்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், கொலைக்கான முக்கியக் காரணங்கள் குறித்தும், கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டுப்புடவைகள் திருட்டு: 5 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.