ETV Bharat / state

பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்; காவல் ஆணையர் தொடங்கிவைப்பு - cctv news in tamilnadu

சென்னை: நந்தனம், கிண்டி, டைடல் பார்க் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒன்பது ANPR சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை பயன்பாட்டிற்காக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை: நந்தனம், கிண்டி, டைடல் பார்க் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 9 ANPR சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை பயன்பாட்டிற்காக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று துவக்கி வைத்தார்.

author img

By

Published : Feb 10, 2020, 7:12 PM IST

சென்னையில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நந்தனம் சந்திப்பில் மூன்று சிசிடிவி கேமராக்கள், கிண்டி சந்திப்பில் மூன்று சிசிடிவி கேமராக்கள், டைடல் பார்க் சந்திப்பில் மூன்று சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் ஒன்பது ANPR சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி நந்தனம் சந்திப்பு அருகே நடைபெற்றது. இதில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கலந்துகொண்டு மூன்று இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை முழுவதும் உள்ள 335 சாலைகளில் 25 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைவதோடு, மக்களின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வு விலகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சிசிடிவி கேமராக்கள் வந்த பின்னர் வழிப்பறி தாக்குதல், சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பித்தல் உள்ளிட்ட வழக்குகளில் 76% போக்குவரத்து காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது பொருத்தப்பட்டுள்ள ANPR சிசிடிவி கேமராக்கள் மூலம் ஒரு வாகனத்தின் எண் தட்டை வைத்து அந்த வாகனம் எந்த நேரத்தில் எந்த சாலையைக் கடந்துள்ளது என்பதை எளிதில் கண்டறிய முடியும் எனவும், இதன் மூலம் குற்றம் செய்துவிட்டு தப்பித்துச் செல்ல முயல்பவர்கள் யாராயினும் எளிதில் பிடிக்க முடியும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண், போக்குவரத்து இணை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மிதிவண்டியை திருடிய நபர் - சிசிடிவி காட்சிகள்

Intro:Body:*சென்னை - ANPR சி.சி.டி.வி கேமராக்கள் இயக்கம் துவக்க நிகழ்ச்சி*

நந்தனம், கிண்டி, டைடல் பார்க் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 9 ANPR (Automatic Number Plate Recognisation) சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை பயன்பாட்டிற்காக சென்னை காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.

10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை நந்தனம் சந்திப்பில் 3 சி.சி.டி.வி கேமராக்கள், கிண்டி சந்திப்பில் 3 சி.சி.டி.வி கேமராக்கள், டைடல் பார்க் சந்திப்பில் 3 சி.சி.டி.வி கேமராக்கள் என மொத்தம் 9 ANPR சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை துவங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி நந்தனம் சந்திப்பு அருகே நடைபெற்றது. இதில் சென்னை காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன் கலந்துகொண்டு 3 இடங்களிலும் உள்ள சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை முழுவதும் உள்ள 335 சாலைகளில் 25 ஆயிரம் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைவதோடு மக்களின் பாதுகாப்பு குறித்த ஐயப்பாடு விலகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் வந்த பின்னர் வழிப்பறி தாக்குதல், சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பித்தல் (Hit and Run Cases) உள்ளிட்ட வழக்குகளில் 76% போக்குவரத்து காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது பொருத்தப்பட்டுள்ள ANPR சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் ஒரு வாகனத்தின் எண் தட்டை வைத்து அந்த வாகனம் எந்த நேரத்தில் எந்த சாலையை கடந்துள்ளது என்பதை எளிதில் கண்டறிய முடியும் எனவும், இதன் மூலம் குற்றம் செய்துவிட்டு தப்பித்து செல்ல முயல்பவர்கள் யாராயினும் எளிதில் பிடிக்க முடியும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் மற்றும் போக்குவரத்து இணை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.