இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு வியக்கத்தக்க சாதனைகளை செய்து வருகிறது. அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கபட்டு வரும் சந்திரனை ஆய்வு செய்ய உள்ள சந்திரயான் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பினை ஆய்வு செய்ய கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் - 1' விண்கலத்தை நிலவுக்கு இஸ்ரோ அனுப்பியது. அடுத்ததாக தற்போது சந்திரயான்-2 திட்டத்தை கையில் எடுத்த கடந்த ஆண்டே விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
பல கட்ட முயற்சிக்கு பின்னர் வரும் ஜூலை 9 முதல் ஜூலை16 க்குள் சந்திராயன்-2 வை விண்ணில் செலுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த' சந்திரயான் - 2' விண்கலம் நிலவை சுற்றி வந்து வரும் செப்டம்பர் 6ம் தேதி நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த சந்திரயான்- 2 செயற்கைகோள் Mak III ராக்கெட் மூலம் ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) எனும் மூன்று நிலைகளுடன் அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோவர் நிலை மாணவர்களது விண்வெளி ஆராய்ச்சியின் முயற்சிக்காக பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.