சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (மார்ச் 19), நாளையும் (மார்ச் 20) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 21ஆம் தேதி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: ''அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்) பகுதியில் 7 செ.மீ, மஞ்சளார் (தேனி), மேட்டூர் (சேலம்), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) தலா 6 செ.மீ, செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), குடியாத்தம் (வேலூர்), சோலையாறு (கோயம்புத்தூர்), ஏசிஎஸ் கல்லூரி ARG (காஞ்சிபுரம்) தலா 5 செ.மீ, பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), ஒகேனக்கல் (தருமபுரி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), களியல் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) ஆகியஇடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் நிலக்கோட்டை (திண்டுக்கல்), உசிலம்பட்டி (மதுரை), பூந்தமல்லி (திருவள்ளூர்), மேலாளத்தூர் (வேலூர்), பெரியகுளம் (தேனி), சோத்துப்பாறை (தேனி), பெரியகுளம் AWS (தேனி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), வில்லிவாக்கத்தில் ARG (திருவள்ளூர்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை'' என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அனுமதி, ஆனால்... - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!