ETV Bharat / state

தென்மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! - தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மிதமான மழை
தமிழ்நாட்டில் மிதமான மழை
author img

By

Published : Mar 1, 2023, 3:00 PM IST

சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 1) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (மார்ச் 2) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 3) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மார்ச் 4ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 5ஆம் தேதி பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, வாலிநோக்கம் மற்றும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், தூத்துக்குடி ஆகியப் பகுதிகளில் தலா 3 செ.மீ., மழைப் பதிவாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர், திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி, நாலுமுக்கு, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: மார்ச் 4, 5-ம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிரான தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 3-ல் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.