சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(மார்ச் 29) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் கூறப்பட்டுள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை(மார்ச் 30) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அழகரை எஸ்டேட் (நீலகிரி) 14 செ.மீ, குண்டேரிபள்ளம் (ஈரோடு) 10 செ.மீ, குன்னூர் (நீலகிரி) 8 செ.மீ, அடார் எஸ்டேட் (நீலகிரி), பர்லியார் (நீலகிரி) தலா 7 செ.மீ, குன்னூர் PTO (நீலகிரி) 6 செ.மீ, மேட்டுப்பட்டி (மதுரை), பெரியபட்டி (மதுரை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 5 செ.மீ, செங்கோட்டை (தென்காசி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 4 செ.மீ, கோத்தகிரி (நீலகிரி), வைகை அணை (தேனி), கெத்தை (நீலகிரி), பெரியகுளம் AWS (தேனி) தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Karnataka Election date: கர்நாடக மாநில தேர்தல் தேதி அறிவிப்பு!