ETV Bharat / state

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்
author img

By

Published : May 9, 2022, 4:03 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 'தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய அசானி புயல் நாளை (மே 10) வடமேற்குத் திசையில் நகர்ந்து வட ஆந்திரா - ஒடிசா கடற்கரையினை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மேலும் இன்று (மே 9) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்; நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

மீனவர்களுக்கு எச்சரிக்கை: நாளை (மே 10) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 85 முதல் 95 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 105 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும்; எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும்; ஆழ் கடலில் உள்ளவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் பலத்த காற்றுடன் மழை - ஸ்கூட்டியுடன் கவிழ்ந்த மாணவிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.