ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்! - உள்ளாட்சி தேர்தல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடப்பதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது.

local body election
author img

By

Published : Nov 5, 2019, 11:08 PM IST

தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடப்பதாக இருந்து பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. அது முதல் உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரிகள் மூலமாகவே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கூட வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் கேட்டுள்ள கால அவகாசம் விரைவில் முடியக் கூடிய நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில தேர்தல் ஆணையம், மாதிரி வாக்காளர் பட்டியலை தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கல் ஆகியவை மேற்கொள்ள நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை கண்டறிந்து அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

மாநில தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து மின்னணு வாக்கு எந்திரங்கள் வாங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு சீட்டு அச்சடிக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்பு வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விவரத்தையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இவ்வாறாக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

மாநில தேர்தல் ஆணையத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட வார்டு முதல் மாவட்டம் வரை கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். எப்படியாவது சீட் பெற வேண்டும் என கட்சி மேலிடத்தில் தொண்டர்கள் முட்டி மோதி வருகிறார்கள். இந்நிலையில் அதிமுக நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தினை சென்னையில் நடத்தவுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளலாம், கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு சீட் தரலாம் என முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடக்கவுள்ளது. இதேபோல் திமுகவும் 10ஆம் தேதி பொதுக்குழு கூட்டவுள்ளது. பாஜக, நாதக ஆகிய கட்சிகளும் தொண்டர்கள் விருப்ப மனு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது. தேமுதிக வரும் 7ஆம் தேதி நடக்கவுள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பற்றி விவாதிக்க இருக்கிறது. மூன்று வருடமாக நடக்காமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கான காலம் மெல்ல கனிந்து வருகிறது.

Intro:Body:சென்னை // வி. டி. விஜய் // சிறப்பு செய்தி

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடப்பதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடப்பதாக இருந்து பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. அது முதல் உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரிகள் மூலமாகவே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கூட வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் கேட்டுள்ள கால அவகாசம் விரைவில் முடிய கூடிய நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில தேர்தல் ஆணையமும் வாக்காளர் மாதிரி வாக்காளர் பட்டியலை தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் ஆகியவை மேற்கொள்ள நவம்பர் 18 ஆம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளை கண்டறிந்து அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. மேலும் மாநில தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்கள் வாங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு சீட்டு அச்சடிக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்பு வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விவரத்தையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இவ்வாறாக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

மாநில தேர்தல் ஆணையத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட வார்டு முதல் மாவட்டம் வரை கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். எப்படியாவது சீட் பெற வேண்டும் என கட்சி மேலிடத்தில் முட்டி மோதி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தினை சென்னையில் நடத்த உள்ளது. உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளலாம், கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு சீட் தரலாம் என முதல்வர், துணை முதல்வர் தலைமையில் ஆலோசனை நடக்க உள்ளது. இதேபோல திமுகவும் 10 ஆம் தேதி பொதுக்குழு கூட்ட உள்ளது. அதேபோல உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினர் 'தேர்வு குழுவிடம்' விருப்ப மனு அளிக்கலாம் என மாநில பாஜக தெரிவித்துள்ளது. அதேபோல நாம் தமிழர் கட்சியும் தொண்டர்கள் விருப்ப மனு வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தேமுதிக வரும் 7 ஆம் தேதி நடக்க உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பற்றி விவாதிக்க உள்ளது. இதேபோல சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியும் வரும் 10 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த உள்ளது. இவாறாக 3 வருடமாக நடக்காமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கான காலம் மெல்ல கனிந்து வருகிறது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.