ETV Bharat / state

கரோனா பணிகளில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த தடையில்லை! - கரோனா வைரஸ் பரவல்

சென்னை: கரோனா தடுப்புப் பணிகளில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த சென்னை மாநகராட்சிக்குத் தடைவிதிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Challenging the involvement of teachers in COVID 19 work, petition dismissed

author img

By

Published : Jul 13, 2020, 2:21 PM IST

கரோனா பரவலைத் தடுக்க, தொற்று பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது, கண்கானிப்பது போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுவருகிறது. இப்பணிகளுக்கு சென்னை மாநகராட்சி பள்ளியாசிரியர்களை ஈடுபடுத்துவதாக முடிவுசெய்து, இதற்கான உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்குத் தடைவிதிக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ”கரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டில் தனிமைப்படுத்தல் திட்டங்களை அமல்படுத்தவும், ஒருங்கிணைப்பு வழங்கவும் 200 ஆசிரியைகளை ஈடுபடுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, இப்பணியில் அனுபவமில்லாத ஆசிரியை ஒருவர் ஈடுபட்டு கரோனா தொற்றுக்கு ஆளாகி, அவரது குடும்பத்தினர் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளார்” என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே கரோனா தடுப்புப் பணிகளுக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்த மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், ”ஆசிரியர்கள் என்பவர்கள் இயற்கையாகவே தலைமைப் பொறுப்பு கொண்டவர்கள். இதுபோன்ற பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

மேலும், இதுபோன்ற பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.