ETV Bharat / state

பொதுத்துறை வங்கி போட்டித் தேர்வில் இட ஒதுக்கீடு குறைப்பு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை : பொதுத்துறை வங்கி போட்டித் தேர்வுகளில் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

challenging reservation order in banking exams, notice to center MHC

author img

By

Published : Sep 1, 2020, 6:48 PM IST

பொதுத்துறை வங்கி அலுவலர்களுக்கான போட்டித் தேர்வுகள் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவிருப்பதாக வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், எக்காரணமும் இன்றி பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இதில் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் பாமக செய்தித் தொடர்பாளர் வினோபா பூபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், “பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மராத்தி, பஞ்சாப், சிந்து மற்றும் யூகோ போன்ற வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 417 வங்கி அலுவலர்கள் பணிக்கு போட்டித் தேர்வுகள் நடக்க உள்ளன.

இதில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையின்படி பட்டியலினப் பிரிவினருக்கு 212 இடங்கள், பழங்குடியினப் பிரிவினருக்கு 107 இடங்கள், இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு 382 என 710 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டிய நிலையில் இந்த ஆண்டு 585 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

யூகோ வங்கி பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டைக் குறைக்கவில்லை. மேலும் வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனத்தில் போட்டித்தேர்வு அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றி புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு, வங்கிப் பணியாளர்கள் தேர்வு வாரிய இயக்குநர் இது தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.