ETV Bharat / state

விடுதலை செய்ய முடியாது... ஆயுள் தண்டனைதான் -நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்கும்போது சம்பந்தப்பட்ட குற்றவாளி, வாழ்நாள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் விதித்த நிபந்தனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

high court
author img

By

Published : Jul 24, 2019, 11:05 PM IST

கொலை வழக்கில் ஒன்றில் ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக்மீரான் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. இவர்களின் கருணை மனுக்களை தமிழ்நாடு ஆளுநர் நிராகரித்ததையடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன.

இந்த மனுக்களை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம் எந்தவித தண்டனை குறைப்பும் இல்லாமல் ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனயாக குறைக்கலாம் என பரிந்துரைத்தது.

அதன் அடிப்படையில் ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக்மீரான் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைத்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், மூவரும் இந்த நிபந்தனையை ரத்து செய்து தமிழ்நாடு அரசின் அரசாணை அடிப்படையில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்போது, ஆயுள் முழுக்க தண்டனை அனுபவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், தண்டனை குறைப்பு என்பது நிபந்தனையுடன் சேர்த்துதானே தவிர, தனித்தனியாக பிரிக்க முடியாது. மன்னிப்பை மட்டும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு நிபந்தனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Intro:Body:தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்கும் போது சம்பந்தப்பட்ட குற்றவாளி, வாழ்நாள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என குடியரசு தலைவர் விதித்த நிபந்தனையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் ஒன்றில் ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக்மீரான் மூவருக்கும் தூக்துதண்டனை விதித்து திருநெல்வேலி முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இவர்களின் கருணை மனுக்களை தமிழக ஆளுநர் நிராகரித்ததை அடுத்து குடியரசு தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம் எந்த வித தண்டனை குறைப்பும் இல்லாமல் ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனயாக குறைக்கலாம் என பரிந்துரைத்தது.

இதன் அடிப்படையில் மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.

இந்த நிபந்தனையை ரத்து செய்து தமிழக அரசின் அரசாணை அடிப்படையில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி இவர்கள் மூவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் போது , ஆயுள் முழுக்க தண்டனை அனுபவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், தண்டனை குறைப்பு என்பது நிபந்தனையுடன் சேர்த்து தானே தவிர, தனித்தனியாக பிரிக்க முடியாது எனக்கூறிய நீதிபதி, தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து இருக்காவிட்டால் மூவரும் தூக்கில் தொங்கி இருக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பை மட்டும் தங்களுக்கு சாதகமாக எடுத்துகொண்டு நிபந்தனை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்குறிப்பிட்டுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.