ETV Bharat / state

நீட் தேர்வர்கள் ஆபரணங்கள் அணிவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு - neet exam news

நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றக் கூறும் நிபந்தனைகளை எதிர்த்த மனுவுக்கு மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Challenge remove ornaments from Neet aspirant
நீட் தேர்வர்கள் ஆபரணங்கள் அணிவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
author img

By

Published : Nov 2, 2020, 4:39 PM IST

மருத்துவப் படிப்புக்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவருகிறது. இந்தத் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக் கூடாது, பர்ஸ் வைத்திருக்கக் கூடாது, கைக்கடிகாரம் அணியக் கூடாது என்பன உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஆண்டுதோறும் மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த் ராஜ், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவில், நீட் தேர்வில் கலந்துகொள்ளும் திருமணமான விண்ணப்பதாரர்கள், புனிதமாக கருதும் தாலி, மெட்டி, காதணி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றும்படி நிர்பந்திக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்வறையில் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவரும் நிலையில், ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது என்பதால் இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்றும் ஆபரணங்களை அகற்றும்படி, மாணவிகளை நிர்பந்திக்ககூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வு, மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய சுகாதாரத் துறை, கல்வித் துறை, பொது சுகாதார சேவை இயக்குநர், தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: 'நீட் தேர்வில் வென்ற இலங்கைத் தமிழரின் மகள்' - இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.