ETV Bharat / state

அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு- 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - latest chennai news

கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக இந்து சமய அறநிலைய துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Challenge implementation of new agamas at temples, notice served MHC
அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு- 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
author img

By

Published : Sep 1, 2021, 3:08 PM IST

சென்னை: கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

அதில், 18 வயதிலிருந்து 35 வயதுடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஒராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு விதிகள் உள்ளன. இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் முத்துகுமார் மற்றும் சிஐடி நகரை சேர்ந்த எஸ். ஸ்ரீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்னும் இடத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் பரம்பரை பூசாரிகள் எட்டு பேர் உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், எட்டு குடும்பங்களிலும் மூத்தவர்கள் இறந்தால் அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண், அடுத்த பூசாரியாக நியமிக்கப்படுவர்.

பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை பின்பற்றப்படுகிறது. மரபுக்கு மாறாக வயது வரம்பு நிர்ணயிப்பது சட்டவிரோதமானது. மேலும், இந்து சமய அறநிலைய சட்டப்படி பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மரபுகளின் படி நியமனம் நடைபெற வேண்டும் என்பதால் இந்த புதிய விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, நான்கு வாரத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளையும் இந்த வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஓய்வு பெறாத அர்ச்சகர்கள் நீக்கப்படவில்லை - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.