ETV Bharat / state

தேர்தல் அறிக்கையை ஆளுநர் புரோகித்திடம் சத்யபிரதா சாகு சமர்ப்பிப்பு - ceo sathya pradha sahu

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான அறிக்கையை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம்,  சத்யபிரதா சாகு சமர்ப்பித்துள்ளார்.

sathya-pradha-
சத்யபிரதா சாகு
author img

By

Published : May 4, 2021, 5:32 PM IST

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல், 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 159 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

தொடர்ந்து, வரும் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று, சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான அறிக்கையை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு சமர்ப்பித்துள்ளார்.

அப்போது, ஆளுநர் செயலர் ஆனந்த்ராவ் வி.பட்டில், கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி & சிறப்பு அரசு செயலாளர் வி.ராஜராமன், இணை தலைமை நிர்வாக அலுவலர் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.