ETV Bharat / state

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பெய்த மழையில் தொய்வு - சென்னையில் ஆலோசனை

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்து உள்ளதாகவும், இதனால் குறைந்தபட்சம் 10 மாவட்டங்கள் வறட்சியை சந்திக்க உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பெய்த மழையில் தொய்வு - சென்னையில் ஆலோசனை
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பெய்த மழையில் தொய்வு - சென்னையில் ஆலோசனை
author img

By

Published : Jul 5, 2023, 9:26 AM IST

டெல்லி: இதற்கான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆஷிஷ் குமார் ஸ்ரீவட்ஷவா மற்றும் தமிழ்நாடு வேளாண்மை செயலாளரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான சி.சமயமூர்த்தி தலைமை வகித்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் அபாய தணிப்பு முகமை இயக்குநர் ராமன் கூறுகையில், “வறட்சியை மிக விரைவில் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு வறட்சியை கண்காணிப்பது முன்னதாகவே என்றாலும், வறட்சி மேலாண்மையின் முக்கியக் கூறுகளையும் தமிழ்நாடு அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

வர இருக்கக் கூடிய தென்மேற்கு பருவமழை சரியாக பொழியவில்லை என்றால், அதனால் ஏற்படக் கூடிய வறட்சியை எதிர்கொள்வதற்கு மாநில அரசு தயார் நிலையில் இருப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், பல்வேறு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் நிலவ உள்ள மழைப்பொழிவு, அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் சேமிப்பு, பயிர் சாகுபடி மற்றும் வறட்சியைத் தணிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய திட்டத்தின் நிலையை வேளாண்மை ஆணையர் எல்.சுப்பிரமணியன் எடுத்துரைத்தார்.

மேலும், 10 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வறட்சி நிவாரணத் திட்ட வரைவு தயாரிப்பதற்காக ஏற்கனவே இரண்டு கூட்டங்களை நடத்தி உள்ளதாகவும், அதன்படி வறட்சியால் பாதிக்கப்படக் கூடிய 23 முக்கிய மாவட்டங்கள் உள்பட 116 தொகுதிகளுடன் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநில மற்றும் மாவட்ட அளவில் 'வறட்சி கண்காணிப்பு' செல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாநில மற்றும் மாவட்ட அளவில், குறிப்பாக அதிக அளவில் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட கண்காணிப்பு முறையை செயல்படுத்துமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு மத்திய இணைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஒருவேளை வறட்சி ஏற்பட்டால், அதை சமாளிக்கவும், மத்திய அரசு வழங்கும் திட்டங்களை விரைவில் செயல்படுத்தவும் மாநில அலுவலர்கள் முனைப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே, நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழையின்போது இயல்பான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மத்திய வேளாண் அமைச்சகம் அதன் அனைத்து மூத்த அதிகாரிகள் மூலம் மாநிலங்களின் தயார் நிலையை சரிபார்க்க முயற்சி எடுத்துள்ளது. வறட்சியை எதிர் கொள்ள மாநிலத்தின் தயார்நிலை சிறப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் சரியான நேரத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த வருடாந்திர செயல் திட்டத்தை முன்கூட்டியே தயாரித்து 2023 - 2024ஆம் ஆண்டிற்கான நிதியை வெளியிடுவதில் நாட்டிலேயே தமிழ்நாடு அரசு முதலிடம் வகிக்கிறது என்றும் இணைச் செயலாளர் கூறியுள்ளார். மேலும் வேளாண் தொழிலில் நலனுக்காக ‘தமிழ் மண் வளம்’ என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.