ETV Bharat / state

கீழடி அகழாய்வுகள் குறித்த வைகோவின் கேள்விகளுக்கு அமைச்சரின் விளக்கம்! - Central Minister Pragalath Patel answers to Vaiko

கீழடி ஆய்வுகள் குறித்து மதிமுக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ-வின் கேள்விகளுக்கு, பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் விளக்கமளித்துள்ளார்.

central-ministry-explanation-for-vaiko-questions-about-keezhadi
author img

By

Published : Nov 20, 2019, 10:33 PM IST

கீழடி அகழாய்வுகள் குறித்து வைகோவின் கேள்விகளும், பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் விளக்கமும் பின்வருமாறு:

கேள்வி: மதுரை அருகே, வைகை ஆற்றங்கரைச் சமவெளியில், கீழடி என்ற இடத்தில் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக் காலத்தவை என்பது உண்மையா?

பதில்: ஆம். கீழடியில், தமிழ்நாடு தொல்பொருள் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு. 6 முதல் மூன்றாம் நூற்றாண்டுக் கால கட்டத்தைச் சேர்ந்தவை என, கரிமப் பகுப்பு ஆய்வுச் சோதனைகளின் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேள்வி: கீழடி ஆய்வுகளில், இந்தியத் தொல்பொருள் துறையின் பங்கு என்ன? அதற்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு?

பதில்: இந்தியத் தொல்பொருள் துறை, 2014/15, 2015/16, 2016/17, 2017/18 ஆகிய ஆண்டுகளில் கீழடியில் மூன்று களங்களில் ஆய்வுகள் மேற்கொண்டது. அதற்காக செலவிடப்பட்ட நிதி 2014/15ஆம் ஆண்டில் ரூ. 7,70,010, 2015/16ஆம் ஆண்டில் ரூ. 48,50,798, 2016/17ஆம் ஆண்டில் ரூ. 35,50,000, 2017/18ஆம் ஆண்டு ரூ. 22,50,000 நிதியும் செலவிடப்பட்டுள்ளது.

கேள்வி: கீழடியில் கிடைத்த பழம்பொருட்களைக் காட்சிப்படுத்த, அங்கே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படுமா? நாடு முழுமையும் உள்ள பிற அருங்காட்சியகங்களில் அந்தப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமா?

பதில்: இல்லை. கீழடியில், தமிழ்நாடு அரசு ஒரு அருங்காட்சியகம் அமைக்கின்றது.

இதையும் படிங்க: அனைத்து கட்சிகளும் ஒத்தைக்கு ஒத்தை போட்டு பாத்திருவோம் - சவால் விடும் அமைச்சர்!

Intro:Body:

கீழடி ஆய்வுகள் குறித்து வைகோ கேள்விகளுக்கு, 

பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் விளக்கம்

கேள்வி எண் 188

கீழ்காணும் கேள்விகளுக்கு, பண்பாட்டுத் துறை அமைச்சரிடம் இருந்து விளக்கங்களை எதிர்பார்க்கின்றேன்.

வைகோ: அ) மதுரை அருகே, வைகை ஆற்றங்கரைச் சமவெளியில், கீழடி என்ற இடத்தில் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக் காலத்தவை என்பது உண்மையா? 

அவ்வாறு இருப்பின், அதுகுறித்து விளக்கம் தருக. 

பண்பாட்டுத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் படேல்: ஆம் ஐயா. கீழடியில், தமிழ்நாடு தொல்பொருள் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு. ஆறு முதல் மூன்றாம் நூற்றாண்டுக் கால கட்டத்தைச் சேர்ந்தவை என, கரிமப் பகுப்பு ஆய்வுச் சோதனைகளின் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைகோ: ஆ) கீழடி ஆய்வுகளில், இந்தியத் தொல்பொருள் துறையின் பங்கு என்ன? அதற்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு?

பண்பாட்டுத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் படேல்: இந்தியத் தொல் பொருள் துறை, 2014/15, 2015/16, 2016/17 ஆம் ஆண்டுகளில்  கீழடியில் மூன்று களங்களில் ஆய்வுகள் மேற்கொண்டது. 

அதற்காக செலவிடப்பட்ட நிதி

2014/15 = 7,70,010

2015/16 = 48,50,798

2016/17 = 35,50,000

2017/18 = 22,50,000

வைகோ: இ) கீழடியில் கிடைத்த பழம்பொருட்களைக் காட்சிப்படுத்த, அங்கே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படுமா? 

நாடு முழுமையும் உள்ள பிற அருங்காட்சியகங்களில் அந்தப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமா?

பண்பாட்டுத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் படேல்: இல்லை. கீழடியில், தமிழ்நாடு அரசு ஒரு அருங்காட்சியகம் அமைக்கின்றது.

‘தாயகம்’ தலைமை நிலையம்

சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.,

20.11.2019

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.