அண்மையில் மறைந்த இந்திய குடியரசு கட்சியின் மூத்த துணை தலைவர் அதிகேசவனுக்கு சென்னை வியாசர்பாடியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு அவரது உருவ படம் திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, அதிகேசவன் ஒரு சமூக ஆர்வலர். அவரது மறைவு தென் இந்தியாவிற்கு பெரிய இழப்பு. அவர் ஒரு சிறந்த மனிதராக திகழ்ந்தார். 2020ஆம் ஆண்டு எதிர்பார்த்த அளவிற்கு நம் நாட்டிற்கு அமையவில்லை. கரோனா வந்து அனைத்தையும் வீணாக்கி விட்டது. 2020 முழுவதும் ’கோ கரோனா கோ’ என்று சொல்லியே முடிந்துவிட்டது. இந்தாண்டில் ’நோ கரோனா’ என்ற நிலைமை வரவேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவர் ஒரு ஆக சிறந்த மனிதர். அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததற்கு எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...சுஷாந்த் சிங் உறவினருக்கு சீட் கொடுக்கும் பாஜக: எதிர்க்கட்சிகளை வீழ்த்த வியூகம்!