ETV Bharat / state

விஷால் புகார் எதிரொலி.. அதிரடி மாற்றத்தை அறிவித்த சென்சார் போர்டு! - tamil cinema news

censor board change: இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு இனி சென்னையில் தணிக்கை பெற்று கொள்ளலாம் என மத்திய அரசின் அறிவிப்பு தமிழ் சினிமா பிரபலங்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி மாற்றத்தை அறிவித்த சென்சார் போர்டு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 9:48 PM IST

சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இந்தியில் டப் செய்து வெளியிட்டார். ஆனால் அப்போது மும்பையில் உள்ள தணிக்கை குழு படத்தை வெளியிடவும், தணிக்கை செய்யவும் லஞ்சம் கேட்டதாக நடிகர்‌ விஷால் வீடியோ வெளியிட்டுக் குற்றம்சாட்டி இருந்தார்.

இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து லஞ்சம் கேட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பான வழக்கை மும்பை CBCID விசாரித்து வருகிறது. விஷால் நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தமிழ்ப் படங்களை இந்தியில் வெளியிடத் தணிக்கை வாங்கும் முறையில் மத்திய அரசு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை மும்பையில் மட்டுமே இந்தியில் வெளியாகும் தமிழ்ப் படங்களுக்குத் தணிக்கை வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி தமிழ்நாட்டிலேயே தணிக்கை பெற்றுக் கொள்ளலாம் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இனி எந்த தயாரிப்பாளரும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்ய மும்பை சென்று CBFCயை அணுக வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழியுடன் சேர்த்து ஏற்கனவே தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்குத் தமிழ்நாட்டிலேயே தணிக்கை பெற்றுக் கொள்ளும் வசதி இருந்து வந்த நிலையில் தற்போது இந்தி மொழி ரிலீஸுக்கும் இந்த முறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஷால் அவர்களால் ஏற்பட்ட இந்த மாற்றம் தமிழ் சினிமாவுக்கு, தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் விஷாலுக்கு நன்றியும், வாழ்த்தும் கூறி பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: லியோ படத்தை காண உற்சாகத்துடன் வந்த மாற்றுத்திறனாளி ரசிகர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.