ETV Bharat / state

செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - நீதிபதி பி டி ஆதிகேசவலு

உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் திட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரிய வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras high court
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jul 22, 2023, 5:33 PM IST

சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்கி சோதனை செய்யும் விரைவு திட்டத்துக்கு மத்திய அரசு 174 கோடியே 64 லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி உள்பட நாடு முழுவதும் 13 மாவட்டங்களை 2018ஆம் ஆண்டு தேர்வு செய்து மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கிய நிலையில், 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கும் விதமாக, ரேஷன் கடைகளில் உள்ள பொது விநியோகத் திட்டம் வாயிலாகவும், பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் வாயிலாகவும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தார்.

இதன்படி ரேஷன் கடைகள், மதிய உணவுத்திட்டம் உள்ளிட்டவைகள் மூலம் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக்கோரி தமிழ் தேசிய பேரியக்கத்தின் மகளிர் ஆயத்தின் செயலாளர் கனிமொழி மணிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுவதாகவும், செறிவூட்டப்பட்ட உணவு ஒழுங்குமுறை சட்டவிதியின்படி, தலசீமியா, ரத்த சோகை உள்ளவர்கள் இரும்புச்சத்து கொண்ட செறிவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும், எந்த ஒரு முறையான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், மக்களுக்கு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களின் ஏழ்மையை பயன்படுத்திக்கொண்டு, இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும், நாட்டில் மிகப்பெரிய உடல் நலபாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான கார்ப்ரேட் நிறுவனங்களின் மறைமுகமாக உதவும் திட்டமாக உள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார்.

எனவே, செறிவூட்டப்பட்ட அரிசியை மத்திய அரசு வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு கடந்த 2022ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த விசாரணையில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், விரைவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 13 மாவட்டங்களில், ஆந்திரா மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தை தவிர, வேறு எந்த மாவட்டத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்று நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:முதியோர் உதவித்தொகை ரூ.1200 ஆக உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.