ETV Bharat / state

CCTV: சென்னை நகைக்கடை விவகாரம் - வெளியான சிசிடிவி காட்சிகள் - Chennai District News

சென்னை பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை நகைக்கடை விவகாரம்- வெளியான சிசிடிவி காட்சிகள்
சென்னை நகைக்கடை விவகாரம்- வெளியான சிசிடிவி காட்சிகள்சென்னை நகைக்கடை விவகாரம்- வெளியான சிசிடிவி காட்சிகள்
author img

By

Published : Feb 24, 2023, 4:15 PM IST

சென்னை நகைக்கடை விவகாரம்- வெளியான சிசிடிவி காட்சிகள்

சென்னை: பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் வெல்டிங் மெஷினால் கடையை ஓட்டைப்போட்டு கடந்த 10ஆம் தேதி ஒரு கும்பல் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், நகைக்கடையில் இருந்த டி.வி.ஆர் கருவிகளையும் கொள்ளையர்கள் எடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.

போலீசார் பூத் அருகே நடைபெற்ற இக்கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். சம்பவ நடந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் தப்பிச்சென்ற காரின் பதிவெண் போலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து பல மாநிலங்களுக்குச் சென்ற தனிப்படை போலீசார், இதேபோல ஓட்டைப்போட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களைப் பிடித்தும், கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் ஆதாரங்களை வைத்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருந்த போதிலும் கடந்த 14 நாட்களாக கொள்ளையர்கள் குறித்த துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் இக்கொள்ளை தொடர்பான இரு சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை நடந்த 10ஆம் தேதி அதிகாலை காரில் இருந்து இறங்கிய மங்கி குல்லா அணிந்த கொள்ளையன் ஒருவர் நோட்டமிட்டு நகைக்கடையில் தாவிக்குதித்து கொள்ளையடிக்க உள்ளே செல்வது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளன.

அதன்பிறகு நகைகளை கொள்ளையடித்தவுடன் காரில், ஆந்திர மாநிலம், சித்தூரை நோக்கி கொள்ளையர்கள் தப்பிச்செல்வது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன. மேலும், இந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான கொள்ளையனின் புகைப்படத்தை வைத்து போலீசார் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:வீட்டில் மூலிகைத்தோட்டம் அமைக்க விருப்பமா? 50 சதவீத மானியமும் உண்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.