சென்னையிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் முன்பதிவு மையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை முதன்மை தலைமை பொறியாளர் ஆர். பாஸ்கரன் நேற்று தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் & எழும்பூர் ரயில் நிலையங்களின் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 கேமராக்களும் எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 நாள்களுக்கு மேல்கூட காட்சிகளைப் பதிவு செய்து சேமிக்கலாம்.
மேலும், சென்னை கடற்கரை, தம்பரம், ஜோலர்பேட்டை, மெல்மருவதூர், செங்கல்பேட்டை, பாண்டிச்சேரி உள்ளிட்ட 34 பயணிகள் முன்பதிவு மையங்களிலும் இதுபோல சிசிடிவி கேமராக்களை பெருத்தப்பட்டுவருகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுப்படியில்கூட மீத்தேன் எடுக்க அனுமதியளித்தவர் ஸ்டாலின்; ஓ.எஸ்.மணியன் தாக்கு