ETV Bharat / state

சிபிஎஸ்இ ரிசல்ட் தாமதம் - கல்லூரிக்கு விண்ணப்பிக்க நாள்கள் நீட்டிப்பு - ரிசல்ட் தாமதம்

சிபிஎஸ்இ தேர்வு முடிகவுகள் தாமதத்தால் பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலம் 5 நாள்கள் நீட்டிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ ரிசல்ட் தாமதம்; கல்லூரிக்கு விண்ணப்பிக்க நாட்கள் நீட்டிப்பு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

author img

By

Published : Jul 8, 2022, 4:04 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 08) உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய நேற்று (ஜூலை 07) கடைசி நாள். பொறியில் படிப்பிற்கு விண்ணப்பம் செய்ய 17ஆம் தேதி கடைசி நாள்.

ஆனால், இன்னும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அந்த மாணவர்களும் பயனடைய வேண்டும். அதன் பொருட்டு CBSE தேர்வு வெளியாகும் வரை காலநீட்டிப்பு செய்கிறோம். சிபிஎஸ்சி ரிசல்ட் தேதி தெரியாத நிலையில் அவற்றிற்கான ரிசல்ட் வெளியான பின்னர் ஐந்து நாள்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் நாள் குறிப்பிடாமல் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் செமஸ்டர் ஆன்லைன் தேர்வில் தோல்வி ஏற்பட்டு இருந்தாலும் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படாது. கரோனா காலம் என்பதால் இந்த சிக்கல், அடுத்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தாமதம் ஆவதில் ஆளுநர் தான் தேதி ஒதுக்க வேண்டும்.

எம்பிஏ மற்றும் எம்சிஏ தேர்வு முடிவு வந்து இருக்கிறது. இனி கவுன்சிலிங் நடப்பதற்கான தேதிகளை உயர்கல்வி துறை வெளியிடும். 3 லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள் அரசு கலை கல்லூரிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 25 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இனி கல்லூரிகளில் பேராசிரியர்கள், கட்டமைப்பு வசதி பொறுத்து தான் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் கல்லூரிகள் தரம் குறைவாக இருப்பதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்வார்கள். உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்போம்.

அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் தரத்தை கண்காணிக்கவும், உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர் கல்வி படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து அவைகள் ஆய்வு செய்யப்பட்டு பின் கல்லூரிகள் தொடங்கப்பட்ட பின்னர் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: உதயநிதியிடம் துண்டுச் சீட்டு - வந்தது கலை, அறிவியல் கல்லூரி...அன்பில் பெருமிதம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.