கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநில பாடம் பயிலும் மாணவர்களுக்கான 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மாநிலத்தில் கரோனா தொற்று தீவிரம் அடைவதற்கு முன்பாகவே நிறைவடைந்தது. சிபிஎஸ்இயின் கீழ் பயிலும் அனைத்து மாநில மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்பதால் , இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஒரே நேரத்தில் நடைப்பெறுவது வழக்கம்.
பொதுத்தேர்வு தொடங்கிய நேரத்தில் இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடையத் தொடங்கியதால், இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக சிபிஎஸ்இ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "ஏற்கனவே முடிவு செய்தப்படி பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, தேர்வு தொடங்குவது தொடர்பாக தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு - ஸ்டாலின் கண்டனம்
!