ETV Bharat / state

CBSE 10th result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 93.12% மாணவர்கள் தேர்ச்சி! - 93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 93.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

cbse exam result
சிபிஎஸ்இ முடிவுகள்
author img

By

Published : May 12, 2023, 6:12 PM IST

சென்னை: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா மற்றும் 26 நாடுகளில் உள்ள 28,471 பள்ளிகளில் இருந்து 21,86,485 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். 7,241 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இன்று (மே 12) தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 93.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதாவது, 20 லட்சத்து 16 ஆயிரத்து 779 பேர் தேர்வாகியுள்ளனர்.

திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91%, கவுகாத்தி மண்டலத்தில் 76.90% மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவிகள் 94.25 சதவீதம் பேரும், மாணவர்கள் 92.27 சதவீதம் பேரும் தேர்ச்சியாகி உள்ளனர். https://results.cbse.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். செல்போன் எஸ்எம்ஸ் மூலமும் மாணவர்களுக்கு மதிப்பெண் விவரங்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் https://results.cbse.nic.in/, http://results.nic.in/, http://resluts.digilocker.gov.in, https://web.umang.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையத்தளங்களிலும் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு 21 லட்சத்து 9 ஆயிரத்து 208 மாணவர்கள் பதிவு செய்தனர். அவர்களில் 20 லட்சத்து 93 ஆயிரத்து 978 பேர் தேர்வு எழுதியதில், 19 லட்சத்து 76 ஆயிரத்து 668 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 94.40 சதவீதமாக இருந்ததது. ஆனால் கடந்த ஆண்டை விட 1.28 % தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

சென்னையில் 99.14% தேர்ச்சி: சென்னை மண்டலத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் 99.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜவகர் நவோதயா வித்யாலாயா பள்ளிகள் 99.14 சதவீதமும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 98 சதவீதமும், சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் 95.27 சதவீதமும், மத்திய திபெத்திய ராணுவப் பள்ளிகள் 93.86 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 81.57 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 80.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

தேசியக்கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் துணைத்தேர்வு ஜூலை மாதம் நடத்தப்படும் எனவும், அந்தத் தேர்வினை மாணவர்கள் எழுதி தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: CBSE Result: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.