ETV Bharat / state

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் - சிபிஎஸ்இ அறிவிப்பு - cbsc announced ctet exam date

கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்) வரும் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

cbsc announced ctet exam date
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும்- சிபிஎஸ்இ அறிவிப்பு
author img

By

Published : Nov 4, 2020, 10:24 PM IST

சென்னை: மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

நடப்பாண்டிற்கான சிடெட் தேர்வு கடந்த ஜூலை 5ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சிடெட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ செயலர் அனுராக் திரிபாதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுளார். அதில், "கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிடெட் தேர்வு ஜனவரி 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். தேர்வின்போது தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு தேர்வு நடைபெறும். நகரங்களின் எண்ணிக்கை 112இல் இருந்து 135 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது கூடுதலான நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களிலும் சிடெட் தேர்வு நடைபெறவுள்ளன. இது குறித்த விவரங்கள் www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு 'சிடெட்' தேர்வர்களுக்கு தாங்கள் தேர்வெழுத விரும்பும் இடத்தை மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

எனவே, தேர்வெழுதும் நகரத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் நவம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதிக்குள் அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணாவைப் புறக்கணிக்கும் சிபிஎஸ்இ - டி.ஆர்.பி. ராஜா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.