சென்னை: சிறுமிகளின் ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக சர்வதேச போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் தஞ்சாவூரை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் 35 வயதான விக்டர் ஜேம்ஸ் என்பவரை கடந்த மாதம் மார்ச் 18 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். விக்டர் ஜேம்ஸ் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை கட்டாயமாக வற்புறுத்தி ஆபாச படங்கள் நடிக்க வைப்பது, அதை வீடியோ எடுத்து மிரட்டுவது போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இத்தகைய குற்றங்களை தடுப்பதற்காக விசாரணை நடத்திய சர்வதேச அமைப்புகள், சர்வதேச மாநாட்டில் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் வன்புணர்வு, குழந்தைகளுக்கு எதிரான ஆபாசத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்வது, குழந்தைகளுக்கு எதிரான வன்புணர்வுகளை தடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தன. இதன் அடிப்படையில் சிறுமிகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்ட விக்டர் ஜேம்ஸை கடந்த மாதம் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தநிலையில் விக்டர் ஜேம்ஸ் கைது செய்யப்பட்ட நிலையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று (மே 19) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், 'விக்டர் ஜேம்ஸ் எட்டு சிறுமிகளை ஆபாசமாக நடிக்க வைத்து செய்து அதனை வீடியோ எடுத்ததோடு, அவர்களைத் தொடர்ந்து மிரட்டி வந்தது தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில சிறுமிகளை அழைத்து வருமாறு இவர் மிரட்டி தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும் இதில், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் பெரும்பாலானோர் 12 வயது கீழே உள்ளவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் எடுத்து வேறு யாருக்காவது விற்பனை செய்து உள்ளாரா? அல்லது இணையத்தில் பதிவேற்றி உள்ளாரா? என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக' சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுமிகளை ஆபாச படம் எடுத்த ஆராய்ச்சி மாணவர் கைது.. பிரதமர் அலுவலகத்திற்கு வந்த மெயில்..
எம்.காம் பட்டதாரியான விக்டர் ஜேம்ஸ் தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் துறையில் இவர் பிஎச்டி படித்து வந்த நிலையில் டெல்லி சிபிஐ துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் கௌதம் தலைமையிலான 11 பேர் அடங்கிய குழுவினர் கடந்த மார்ச் 15 ஆம் தேதி இவரது வீட்டில் திடீர் விசாரணை நடத்தினர்.
இவர் பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறாக மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதாகவும், இதனால் தான் இவரிடம் இவ்வாறு திடீர் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், இவர் சர்வதேச கும்பலுடன் தொடர்பில் இருப்பதாகவும், அத்துடன் குழந்தைகளை வைத்து ஆபாச படமெடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகவும் திடுக்கிடும் தகவல்கள் போலீசாரின் விசாரணைக்குப் பின் வெளிவந்தன.
திடீர் திருப்பமாக இவர் சிறுமிகளை வைத்து ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகவும், சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் மீது போக்சோ சட்டம், கூட்டு சதி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவர் மீது சிபிஐ போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இண்டர்போல் போலீசார் (INTERPOL) இவர் மீது இதுகுறித்து மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த விவகாரத்தை சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Aryan Khan Case : சமீர் வான்கடே மீதான நடவடிக்கைக்கு தடை - சிபிஐக்கு முட்டுக்கட்டை போட்ட மும்பை உயர் நீதிமன்றம்!